Oktober 23, 2024

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் – 3 டிரொன் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி அழிப்பு!

நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஏமன் நாட்டில் அரசு படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து வரும் உள்நாட்டு போரில் ஏமன் அரசுக்கு அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் அங்கம் வகிக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பின் ஐக்கிய அரபு எமிரேட்சை குறி வைத்து வீசப்பட்ட ராக்கெட்டுகள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளனஇந்த நிலையில் ஐக்கிய அரபு ஏமிரேட்சில் தாக்குதல் நடத்த வந்த 3 டிரோன்கள் நடுவானிலேயே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சில் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, ‘மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஊடுவிய 3 டிரோன்கள் வழிமறித்து அழிக்கப்பட்டது. எந்த ஒரு அச்சுறுத்தலையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert