Mai 12, 2025

திங்கள் முதல் பாடசாலை:முழுமையாக திறப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்புமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.