März 28, 2025

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக நிலநடுக்கம் பதிவானது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.