Mai 5, 2024

சிறிலங்காவின் பொக்கிசத்தை அள்ளிச்செல்ல கடும் போட்டி

சிறிலங்காவின் பொக்கிசத்தை அள்ளிச்செல்ல கடும் போட்டி

இலங்கையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதற்காக அமெரிக்காவும், சீனாவும் விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட, ‘ஆசியாவின் ராணி’ (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள இக்கல் 310 கிலோகிராம் எடைகொண்டது.

ஒற்றைப் படிகத்தினாலானமையினால் அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்துக்கும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், இந்த நீலக்கல் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நீலக்கல்லை, இணையவழியில் இடம்பெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னதாக விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ள நிலையில், சீனாவும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.