März 31, 2025

மற்றொரு பங்காளியும் ஆளுநர் கதிரையில்!

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய வசந்த கருனாகொட, இதற்கு முன்னர் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவர்.

ராஜா கொல்லுரேயின் மறைவையடுத்து வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக வசந்த கருனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.