März 31, 2025

அச்சுறுத்தல்:ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு!

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ச , பந்துல குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ,எம் பிக்களான .கயந்த கருணாதிலக்க , ரவூப் ஹக்கீம் , விஜித்த ஹேரத் , ரஞ்சித் மத்துமபண்டார , சுமந்திரன் , அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உறுப்பினர்களாவர்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் ,எம்.பிக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டுமெனவும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.