கொரோனாவை கொல்லும் சூயிங்கம்! அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு

கொரோனா வைரஸை கொல்ல அமெரிக்க விஞ்ஞானிகள் சூயிங்கம் ஒன்றை தயாரிக்கு முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, நடாத்தப்பட்ட ஆய்வில் தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஹென்றி டேனியல் கூறுவதாவது, ‘கொரோனா வைரஸ், மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பெருகுகிறது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர் வாயிலிருந்து வெளியேறி மற்றவர்களை அடையக்கூடும்.
உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரசை எங்கள் சூயிங்கம் கொல்லும். இதன்மூலம், கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படுவதுடன், அதன் பரவலும் தடுக்கப்படும்’ என்று கூறுகிறார்.
தாவரத்தில் இருந்து பெறப்படும் ஏசிஇ2 என்ற புரதம் பயன்படுத்தி செய்யப்படும் இந்த சூயிங்கம் கொரோனா நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரியில் இதை பரிசோதித்தபோது நல்ல பலனை கொடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.
அடுத்தகட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புரதம் அடங்கிய சூயிங்கம்மை கொடுப்பது பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் இருக்குமா என்று அறிவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.