Oktober 22, 2024

அமெரிக்காவின் 8வது எம்.கியூ-9 ரீப்பர் வேவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர் ஹூதிப் அமைப்பினர்

அமெரிக்காவின்  MQ-9 ரீப்பர் ட்ரோனைச் சுட்டு வீழ்த்தியதாக யேமனைத் தளமாக இயங்கும் ஹூதிப் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

காஸாவில் மோதல் தொடங்கியதில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த வகையிலான எட்டாவது ஆளில்லா விமானம் இது என்று ஹூதிப் அமைப்பி செய்தித் தொடர்பாளர் அன்சார் அல்லாஹ்வின்  யஹ்யா சாரியா தெரிவித்தார்.

ஹூதிப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் குறித்து இதுவரை அமைதி காத்து வருகின்றது. 

இந்த வேவு விமானம் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதிக நேரமும் அதிக தூரமும் வானில் பறந்து வேவுத் தகவல்களை சேகரித்து தாக்குதல் நடத்தக்கூடிய திறன் கொண்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert