März 28, 2025

இருளுள் இலங்கை:ஒமிக்ரானும் வந்தது!

இலங்கை மின்சாரசபை பணியாளர்களும் போராட்டத்திற்கான முன்னறிவிப்பினை விடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதனை சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

திடீர் மின்தடைக்கான காரணம் தெரியவராத போதும் நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஒமிக்ரான் கொரோனா திரிபுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரான் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.