März 28, 2025

அபுதாபிக்கு பறந்த கோட்டாபய

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(gotabaya) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி இன்று (03) பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவுள்ள 5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பரவலாகப் பயன்படுத்தப்படும் பிற நாடுகளின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் விவாதிக்க “இந்திய சமுத்திர மாநாடு” 2016 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.