März 28, 2025

வல்வெட்டித்துறை நகரசபை கவிழ்ந்தது!

வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மீள திருத்தியமைக்கப்பட்டு இன்றைய தினம் சுயேட்சைக்குழுவின் தலைவரான செல்வேந்திராவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமே இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதனால் செல்வேந்திரா தவிசாளர் பதவியை இழக்கவுள்ளார்.

முன்னதாக வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த கருணாகரன் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததனையடுத்து குழப்பகரமான சூழல் நீடிக்கின்றது.