März 28, 2025

ஆளும் தரப்புடனான மோதல் உச்சம் -மைத்திரி தரப்பு வெளியிட்ட புதிய அறிவிப்பு

ஆளும் தரப்புடனான முறுகல் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் அரச தலைவர் மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய முக்கியமான தருணத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச (Prof. Rohana Lakshman Piyadasa)தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்குமா? இல்லையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அடுத்தவாரம் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும். மேலும், முக்கியமான தருணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உரிய தீர்மானங்களை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.