März 28, 2025

உள்ளேயா? அல்லது வெளியேயா?

தமிழர் தாயகத்தில் கொலைகளை அரங்கேற்றிய அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

வுணபிதா.கலாநிதி சிறில் காமினி உட்பட பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

வணபிதா.கலாநிதி சிறில் காமினி உள்ளிட்டவர்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பு திட்டமிடல்களை செய்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே உள்ளிட்டவர்கள் தொடர்பில் நடத்திய காணொலி உரையாடலையடுத்து வணபிதா.கலாநிதி சிறில் காமினியை கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.