März 28, 2025

கனடாவில் தொடர்மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியினூடாக செல்லும் எண்ணைக் குழாய்களும் மூடப்பட்டுள்ளன.

வான்கூவருக்கு வடகிழக்கே உள்ள மெரிட் நகரத்திலேயே அங்கு வசிக்கும் 7100 பேரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.