März 28, 2025

பட்டிப்பளை பிரதேச செயலாரின் அறை முற்றுகையிட்ட தேரர்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை, மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றார்.இதன்காரணமாக, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் இன்று (15) முற்றாக முடங்கியுள்ளன.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை, விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே, இந்தப் போராட்டத்தை தேரர் முன்னெடுத்து வருகின்றார்.

பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையிலும் அரச ஊழியர்களின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.