März 28, 2025

மனஅழுத்தத்திற்கான காரணம் என்ன?

பொதுவாகவே மனிதர்கள் குடும்பம், வேலை என்று பறந்து கொண்டு இருக்கிறார்கள். இவற்றினாலும் வெளிக்காரணிகளினாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தம்மையும் பிறரையும் வன்முறைக்கு உட்படுத்தி விடுகின்றார்கள்.
இவற்றுக்குத் தீர்வுதான் என்னவென்று சிந்திக்கும் போது
 இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?சட்ட நடவடிக்கைகள் என்ன?
இதற்குரிய வைத்தியம் என்ன?
வேறு தீர்வுகள் என்ன?
என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது .
அதனால் இத்தனையையும் ஒரே நாளில் அறிந்துவிட Zoom வழி ஒன்று கூடுவோம் என்றன் உணர்வு ஏற்பட்டது. என்னோடு சேர்த்து உங்களுக்காகவும் வைத்தியர், சட்டத்தரணி, ஹிப்னோடிஸ பயிற்சியாளர், மனநலவியலாளர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள்.
கீழுள்ள இணைப்பை அழுத்தி அனைவரும் கலந்து கொண்டு உங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.