பாகிஸ்தானுக்கும் பரவியது குரங்கம்மை நோய்!!

ஆபிக்காவைத் தாண்டி பாகிஸ்தானிலும் குரங்கம்மை நோய் ஒருவருக்குப் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என பாகிஸ்தான் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்தக் குரங்கம்மையின் மாறுபாடு குறித்து தெளிபடுத்தாமல் இத் தகவலை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்றுநோய்க்கு உள்ளானவர் 34 வயதுடைய நோயாளி வளைகுடா நாட்டில் இருந்து பயணம் செய்தவர் என பாகிஸ்தானின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மரபணு வரிசைப்படுத்தல் மற்றும் உறுதிப்படுத்தலுக்காக மாதிரிகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நோயாளிகளில் மூன்று வழக்குகள் வரை கண்டறியப்பட்டது என்றும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என உள்ள உள்ளூர் சுகாதாரத் துறை அறிவித்தது.
ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வெளியே மிகவும் ஆபத்தான குரங்கம்மை நோய் முதல் சுவீடன் நேற்று வியாழக்கிழமை பரவியமை கண்டறியப்பட்ட ஒரு நாள் கடந்த பாகிஸ்தானில் இந்த நோய் பரவியுள்ளது.