März 28, 2025

13 தமிழரசு எதிர்ப்பு:ஓடிவந்த இந்திய தூதர்!

13வது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களது அரசியல் தீர்வை முடக்க இலங்கை இந்திய அரசுகள் மும்முரமாகியிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 2ம் திகதி கூட்டப்படவிருந்த 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கோரும் கூட்டத்தை தமிழரசுக்கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதனிடையே இந்தியத் தூதுவர் கோபால் பால்கிலே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இச் சந்திப்பில் தூதுவர் கோபால் பால்கிலேயுடன்  அவரது அதிகாரியும் இரா.சம்பந்தனுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குகொண்டிருந்ததாக தெரியவருகின்றது.