März 28, 2025

இன வீதாசாரத்தை மற்றியமைக்கும் சதி!! வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் இன்று கொட்டும் மழையிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இக் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
அனுராதபுரம் மதவாச்சியில் இருந்து 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதன் மூலம் இன வீதாசாரத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் அரசின் இரகசிய நகர்வை எதிர்த்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.