März 28, 2025

ஊசி போட்டிருந்தாலே பல்கலையினுள் அனுமதி!

இலங்கையில்  பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கும் நாளினை தீர்மானிக்கும் அதிகாரம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

முதல் கட்டத்தின் கீழ், 2 வாரங்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் போட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது.