März 28, 2025

அனுராதபுரத்திலிருந்து மகசீனிற்கு?

கொலை அச்சுறுத்தலிற்குள்ளான தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறையிலிருந்து கொழும்பு மகசீன் சிறைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண சிறைக்கு மாற்றம் செய்யுமான அவர்களது கோரிக்கை பாதுகாப்பின்மை காரணத்தை முன்னிறுத்தி மறுதலிக்கப்பட்டுள்ளதாக யாழ்.ஊடக அமைய செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு அவர்கள் மகசீன் சிறையை சென்றடைந்துள்ளனர்.

முன்னதாக யாழ்.சிறைக்கு தம்மை மாற்றம் செய்யுமாறு அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அமைச்சர் சரத் வீரசேகரா நிராகரித்துள்ளார்.

தென்னிலங்கையிலுள்ள ஏனைய ஜந்து சிறைகளது பெயர்கள் வழங்கப்பட்டு அதிலுருந்து தெரிவு செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து மகசீன் சிறையை அவர்கள் தெரிவு செய்துள்ளனர்.