März 29, 2025

மண் கொள்ளையில் பஸிலும் சகபாடிகளும்!

மட்டக்களப்பில் மண் வியாபாரத்தில் பஸிலும் அவரது சகபாடிகளுமே பின்னிற்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியின் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின்  கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்.  அடுத்தது, சதாசிவம் மயுரன் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் தம்பி, மற்றையவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் என தெரிவித்துள்ள இரா.சாணக்கியன் இவர்கள் மூலம் வடகிழக்கு வளங்கொள்ளையிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.