Mai 15, 2025

ஆசிரிய தினம்:வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

ஆசிரியர் தினத்தினை கறுப்பு தினமாக அறிவித்து , இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முத்திரைச்சந்திக்கு அருகில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலத்திற்கு முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர் மாணவர் பெற்றோர்களை துன்புறுத்துகின்ற  கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, 24 வருட ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டுக்கு  உடனடியாக தீர்வினை வழங்கு, இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் கொத்தலாவல  சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய் ஆகிய மூன்று அம்ச  கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.