März 28, 2025

கொலையாளி மகளிற்கு அள்ளி கொடுக்கிறது இலங்கை!

இன அழிப்பின் பங்காளிகளில் ஒருவரான  பிரசன்ன டி சில்வாவின் மகளான  பாடகி யொஹானி டி சில்வாவை இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தூதராக நியமிக்க சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடகி யொஹானி டி சில்வா தூதுவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளார் என்று அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

‚மெனிகே மகே ஹிதே‘ பாடல் மூலம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் மிகவும் பிரபலமான புதிய தலைமுறை பாடகி யொஹானி டி சில்வா  இதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (05)  இடம்பெறும் அமைச்சரவை சந்திப்பில் சமர்ப்பிப்பார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.