März 28, 2025

அல்லாஹாவுக்குப் பின்னர் முஸ்லிம்கள் என்னையே வழிபடுகின்றனர் – சரத் வீரசேகர சர்ச்சை

முஸ்லிம் மக்கள் இறைவன் அல்லாஹாவுக்கு பிறகு வழிபடும் ஒரே தெய்வம் சரத் வீரசேகர (Sarath Weerasekara)  என்று அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் தன்னிடம் கூறியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்தளவுக்கு தான் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தென்னிலங்கை வானொலி ஒன்றில் ஒலிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் முஸ்லிம்கள் அல்லாஹாவுக்கு நிகராக எவரையும் இணை வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.