März 28, 2025

ஆனந்தி,சிவாஜி கடிதமும் சென்றது!

ஆளாளுக்கு ஜநாவிற்கு கடிதமெழுதும் நிலையில் இன்று ஜநா அமர்வு நடைபெறுகின்ற நிலையில் அனந்தி மற்றும் க.சிவாஜிலிங்கம் தரப்பு தனித்து தாம் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் அவருடன் இணைந்த தரப்புக்கள் வடகிழக்கை தமிழர் நாடு என அடையாளப்படுத்த தவறிவிட்டதாக அனந்தி,சிவாஜி தரப்பு முரண்பட்டிருந்த நிலையில் தாம் ஒப்பமிடுவதிலிருந்து விலகியிருந்தனர்.

இந்நிலையில் இன்று அவர்களது கடிதம் ஊடகங்களிற்கு கிட்டியுள்ளது.