März 28, 2025

யாழில் அரங்கேறிய கொடூரம்- குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை!

யாழ். மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ். போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.