März 28, 2025

தனிமைப்படுத்துதல் அறையில் பெரியவர்களுடன் சிறுவன்!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டில் சிறுவர்கள் அதிகமாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக இலங்கையின் ஒரு பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டோர் இடத்தில் 22 படுக்கைகள் கொண்ட ஒரு மண்டபத்தில் பெரியவர்களுடன் பாலகனையும் அமர்ந்திருக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் தனது பள்ளி பாடபுத்தகத்தோட தனிமைப்படுத்தலில் இருக்கும் புகைப்படத்தை முகநூலில் சமூக ஆர்வலர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.