März 28, 2025

நல்ல விலையில் தீவகம்!

கொழும்பு முன்னணி தனியார் நிறுவனங்களிற்கு தீவகத்தை தாரை வார்ப்பதில் டக்ளஸ் மும்முரமாகியுள்ளார்.

ஓசன் பாம் நிறுவனத்தினால் வேலணை கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள நண்டு வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளை இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளாராம்.

‚நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி – நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி‘ எனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுடன் தனியார் நிறுவனத்தினால் நண்டு பண்ணை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண்ணை வளர்ப்பு திட்டங்களில் ஒன்றாக வேலணை கிராமத்தில் தென்னில்ங்கை பினாமி அமைப்பான அன்னை குழுமத்தினால் ஆரம்பிக்கப்படுகின்ற இறால் பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.