März 28, 2025

இலங்கையில் நாடாளுமன்ற கொத்தணி!

இலங்கை நாடாளுமன்ற கொரோனா கொத்தணி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை கடந்த 4ஆம் திகதி அவரது உறவினரின் இறுதி சடங்கிற்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் ஹரின் பெர்ணான்டோ அவரைச் சந்தித்திருந்தார்.

இதனையடுத்து ரஞ்சனுடன் நெருங்கிய தொடர்பை பேணியதன் காரணமாக அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஏற்கனவே மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிந்ததே.