April 5, 2025

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை முதலாவது இடத்திலுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஏழு நாட்களில் உலகின் முதலாவது இடத்தை இலங்கை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த மூன்று வாரங்களில் மேலும் 5.6 மில்லியன் சினோபாம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.