Mai 15, 2025

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தபால் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றி வைப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (13.07.2021) காலை 8.30 மணி தொடக்கம் 1.30 மணிவரையில் அஞ்சலகம் (தபால் சேவை) சார்ந்தவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.

சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திலுள்ள தபால் சேவை நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் , ஊழியர்கள் , தபால் வழங்குனர்கள் என அனைவருக்கும் சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.