Mai 15, 2025

அதிரப் போகும் கொழும்பு! எச்சரிக்கையுடன் வந்த தகவல்

 அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக விரைவில் கொழும்பில் இளைஞர்களின் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டிருக்கின்றார்.

கொழும்பில் இன்று மிகப்பெரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததையொட்டி அவர் அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

மாவட்ட மட்டத்தில் அரச அடக்குமுறைக்கெதிரான போராட்டங்களை ஒருநாள் கொழும்பில், இளைஞர்களை அழைத்து நடத்தவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Gallery