März 31, 2025

சக்தி,சிரசவை மூட ஆராய்ந்தோம்:ஹெகலிய!

சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளை இழுத்து மூடுவது தொடர்பில் ஆராயப்பட்டதை இலங்கையின் ஊடக அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளாhர்.அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது உண்மை என அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிரசதொலைக்காட்சியின் செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனைகளை முன்னெடுத்ததை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல  ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு உள்ள உரிமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான் எதனையும் இரகசியமாக செய்யவில்லை .ஊடகங்கள் எந்தவித தயக்கமும் இன்றி தங்களிற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை துஸ்பிரயோகம் செய்கின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டங்களை மீறும் ஊடகங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதில் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகள் முன்னின்று செயற்படுவது குறிப்பிடத்தக்கது.