März 28, 2025

ரணிலுக்கு மகிந்த விருந்து:தெற்கில் பரபரப்பு!

ஜி.எஸ்.பி.வரிச்சலுகை பற்றிய ஜரோப்பிய ஒன்றிய அறிவிப்பின் மத்தியில் மஹிந்த ரணிலுக்கு வழங்கிய விருந்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

மகிந்தவைச் சுற்றியுள்ள மக்களுக்கு அரசியல் சரியாகத் தெரிந்தால், அவர்கள் புகைப்படம் எடுக்கவோ, பகிரங்கப்படுத்தவோமாட்டார்கள். இதைப் போல சந்திப்புக்கள்  ஆச்சரியமில்லை. என்றாலும், இவற்றின் காரணமாக ஏதோ மோசமான ஒன்று நடக்கிறது.இது ஒரு நல்ல விடயம் அல்லவென கருத்து வெளியிட்டுள்ளார் முன்னணி சமூக செயற்பாட்டாளர் தர்மசிறி.

ரணிலுக்கு வழங்கப்பட்ட விருந்து தொடர்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மகிந்த தரப்பே கசியவிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.