Mai 12, 2025

பசிலுக்கு யாழில் விசேட பூஜை!

யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த விசேட பூஜை வழிபாடு இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி இடம்பெறுகின்றது.