März 28, 2025

தடைக்கு தேயிலை தடை?

 

இலங்கை படிப்படியாக இறக்குமதிகளை தடைசெய்துவருகின்ற நிலையில் பதிலிற்கு இலங்கையின் தேயிலை இறக்குமதியை இடைநிறுத்த பல நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இதனையடுத்து ஊடகங்களில் வெளியான  மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், உள்ளிட்ட மின்னணு பொருட்கள்,  போன்றவற்றை இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்துவதாக வெளியான செய்தியை நிதி அமைச்சு மறுத்துள்ளது.

இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வாகன இறக்குமதி,உர இறக்குமதி,அரிசி இறக்குமதியென தடைகளை போட்டுவந்த இலங்கை தற்போது மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், உள்ளிட்ட மின்னணு பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்க முற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பதிலுக்கு இலங்கை தேயிலை இறக்குமதியை நிறுத்த சர்வதேச நாடுகள் முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.