März 28, 2025

இலங்கையில் தலைமறைவாக இருந்த அமெரிக்க புலனாய்வு உறுப்பினர் தப்பியோட்டம்

கடந்த நான்கு மாதங்களாக இலங்கையில் தலைமறைவாக இருந்த அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ இன் உறுப்பினர் ஒருவர் ருமேனியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மியன்மாரில் இருந்து சுற்றுலாபயணி என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவரிடம் இரண்டு பாஸ்போட்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.