März 29, 2025

சீன ஆமி பணிகள் இலங்கையில் நிறுத்தம்!

 

திஸ்ஸமஹாராம வாவியில் சீன – இலங்கை கூட்டு நிறுவனம் முன்னெடுக்கும் சேற்று மண்ணை அகற்றும் நடவடிக்கையை தமது அனுமதி பெற்றுக்கொள்ளும் வரை  தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களம் மதிப்பீடு செய்து வாவிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.