März 28, 2025

யாழ்.நகரினுள் வெடிகுண்டு!

யாழ்.மாநகர சபை துப்பரவு பணியாளர்களால் யாழ்.நகரின் மையப்பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணையொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகரின் ஸ்ரான்லி வீதி நதியா நகைக்கடை முன்பதாக வடிகாலில் வெடிக்காத நிiயில் எறிகணை மீட்கப்பட்டுள்ளதனை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெருமளவு மக்கள் நடமாட்டமிருந்த இப்பகுதியில் எறிகணை மீட்கப்பட்டமை மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.