März 28, 2025

கப்பல் கப்டன் கைது!

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பற்றிய எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரஷ்ய பிரஜையான குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (14) மதியம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக ஊடகப்பேச்சாளர்  குறிப்பிட்டார்.