Mai 14, 2025

இலங்கையில் கட்டுக்கடங்காதுள்ளது?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் ஒரேநாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இந்த அறிக்கையின் பிரகாரம், மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 19 கொரோனா மரணங்களும், ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை 48 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

நேற்று (09) உறுதி செய்யப்பட்ட கொவிட் 19 மரணங்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குகின்றனர்.