März 28, 2025

தப்பிப்போர் அதிகரிப்பு:வீடுகளில் மரணமும் அதிகரிப்பு!

இலங்கை அரசினால் பேணப்படும் இடைத்தங்கல் முகாம்கள் போதிய தரமற்றவையாக உள்ள நிலையில் தங்க வைக்கும் தொற்றாளர்கள் தப்பியோடுவது அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி குறித்த நபர் தப்பிச்சென்ற நிலையில், , தமன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கிளிநொச்சியில் தப்பியவரோ மற்றும் தப்பித்த சிறைக்கைதியோ அகப்பட்டிருக்கவில்ரை.

இதனிடையே நாளுக்கு நாள் இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 20ஆம் திகதி முதல் தற்போது வரையில் பதிவாகிய 221 மரணங்களில் 54 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். அதில் 22 மரணங்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று உறுதி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது.