Mai 13, 2025

கொரோனா தடுப்பு மருந்து:சீன வியாபாரம்

 

கொரோனா தடுப்பு மருந்துகள், 15 மில்லியன் டோஸ் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) கூடிய, வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 15 மில்லியன் டோஸில், 14 மில்லியன் டோஸ் சீனாவின் சினோஃபார்ம்,1 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்து.