März 28, 2025

இலங்கை இராணுவம் கொலை செய்தது:சரத் பொன்சேகா!

முகமாலை இராணுவ பின்னரங்கு பகுதியில் இருந்த மிருசுவில் கிராமத்திற்குள்ளே சென்று, இராணுவ ஒழுக்கத்தை மீறி, அப்பாவி தமிழ் மக்களை வெட்டிக்கொன்ற கொலைக்கைதி இராணுவ சிப்பாய் இரத்நாயக்கவை கோத்தபாய விடுவித்தது பிழை“ என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா,.

இதனிடையே அவர் பகிரங்கமான இதனை  பேசியதற்காக, சரத் பொன்சேகா எம்பியை, அருகில் சென்று கைலாகு கொடுத்து, முதுகில் தட்டி பாராட்டியுள்ளனர் நண்பர்களான மனோகணேசன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ரவூப் கக்கீம்.

நாங்கள் இந்த கருத்தை சொல்வதை விட, முன்னாள் இராணுவ தளபதி இவ்விதம் சொல்வது சிங்கள மக்களை சிந்திக்க தூண்டும் என நாம் நினைக்கின்றோம் என மனோகணேசன் விளக்கமளித்துள்ளார்.