März 28, 2025

300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்தமூதாட்டி உயிரிழந்தார்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்த 116 வயது மூதாட்டி காலமானார்.அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான, ஹெஸ்டர் ஃபோர்டு (Hester Ford), கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.

ஹெஸ்டர் ஃபோர்டு கடந்த 1905 அல்லது 1904 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 14 வயதில் ஜான் ஃபோர்டு என்பவரை திருமணமான செய்து கொண்ட ஹெஸ்டருக்கு, 14 குழந்தைகளும், 68 பேரக்குழந்தைகளும், 125 கொள்ளுப் பேரக்குழந்தைகளும், 120க்கும் மேற்பட்ட எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.