März 28, 2025

ஈழத்தமிழருக்காய் ஒலித்த குரல் ஓய்ந்து போனது.

மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர்,அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு ஈழத்தமிழரின் இதய அஞ்சலிகள்.
யுத்தகாலத்தில் மக்களுக்காக இடையறாது தனது சேவையை வழங்கியவர்.தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். தமிழ்த்தேசியத்தின்பால் இவர் கொண்ட பற்றுறுதி போற்றுதற்குரியது.
மனித உரிமைமீறல்களுக்காகவும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையெனவும் வாதாடியவர்.
„ஆயன் தனது மந்தைகளைக் காப்பதுபோல எம் இனத்தைக்காக்க ஓங்கி ஒலித்த குரலுக்கு நித்திய ஆன்ம இளைப்பாற்றியைக் கொடுத்தருளும் இறைவா..
ஆழ்மன அஞ்சலிகள் ஆண்டகையே!