März 28, 2025

பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி!

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை  அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த இனம்தெரியாத நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்.

பல்பொருள் அங்காடிக்குள் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே இருந்ததால், காவல்துறையினர் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது அந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.