März 28, 2025

யாணைகள் இடையே சண்டை! பார்வையாளர்கள் தப்பி ஓட்டம்!

ரஷ்யாவில் சர்க்கஸில் இரு யானைகளுக்கு இடையே சண்டை மூண்டதால் பார்வையாளர்கள் அலறியடித்து தப்பி ஓடினர்.கஸான் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சர்க்கஸில் ஜென்னி மற்றும் மகதா என பெயரிடப்பட்ட இரு யானைகள் சாகசத்திற்காக அழைத்து வரப்பட்டன.

அருகில் இருந்த இருக்கையில் மகதா ஏற முயன்றபோது, ஜென்னி அதன் மீது மோதி கீழே தள்ளியது. தொடர்ந்து எழ முயன்ற மகதாவை பார்வையாளர்கள் மீது தள்ளி விட்டது.

இதனைக் கண்ட பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட மகதா, எழுந்து ஜென்னியைக் கீழே பிடித்து தள்ளியது. ஒரு யானை மீது பயிற்சியாளர் கரிசனம் காட்டியதால் மற்றொரு யானைக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம் என உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.