Mai 13, 2025

இலங்கை :கதிர்வீச்சு அறையினுள் சித்திரவதை!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கதிரியக்க சிகிச்சை வழங்கும் அறையினுள் இரு தாதிகளை அடைத்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

பழிவாங்கும் வகையில் மகரகம வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் வைத்து  இரண்டு தாதியர்கள் பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பவம் தொடர்பாக கதிரியக்க நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தாதியர்கள் மகரகம  பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டு கதிரியக்க நிபுணர்கள் மீது குறித்த தாதியர்கள் முறைப்பாடு செய்த நிலையில் அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.